சோரியாசிஸ்
சோரியாசிஸ் என்பது தோல் சிவந்து தடித்து காணப்படும். தோலின்
மீது வெண்மையான பளபளப்பான மீன் செதில் போன்று உதிர
ஆரம்பிக்கும் இதை மீன் செதில் படை என்று கூறுவார்கள். தோலின் வளர்ச்சி
அபரிதமாக இருந்து அதனால் தோல் தடித்தும் இறந்த செல்களினால் மீன் செதில் போன்றும்
உதிரும்.
இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ, உயிருக்கு ஆபத்தை
விளைவிக்கும் நோயோ அல்ல. ஆனால் உடல் அழகையும்,தன்னம்பிக்கையும் குறைக்கும் நோய்.
சிவந்த தட்டையான திட்டுகள் முழங்கைகள் மற்றும்
முழங்கால்களின் தோல்களில் அடிக்கடி ஏற்படும். இந்த நோய் உச்சந்தலை முதல்
இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
சோரியாசிஸ் சில தகவல்கள்
Ø சோரியாசிஸ் யாருக்கு
வேண்டுமானலும் வரலாம்.
Ø சோரியாசிஸ் முக்கியமாக
நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருகிறது.
Ø சோரியாசிஸ் என்பது தொற்று
நோய் இல்லை. இது மற்றவர்களுக்குப் பரவாது. தாம்பத்யம் நடத்தக்கூடிய நோய்
பாதிக்கபட்ட கணவன் அல்லது மனைவி இவர்களில் யாருக்கேனும் இருந்தால் மற்றவருக்கு
தொற்றாது.
Ø பரம்பரை ஒரு காரணமாக
கருதப்படுகிறது. ஆனால் ஒரு பரம்பரையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்ததாகவும்
கூறமுடியவில்லை.
Ø வைரஸ், பக்டீரியா, பூஞ்சை போன்ற
நோய்க்கிருமிகளாலும் வருவதாகவும் நிருபிக்கப்படவில்லை.
சோரியாசிஸ் நோயின் வகைகள்
Plaque
Psoriasisi - சிவந்த மீன் செதில்கள்
போன்று ஒட்டிக்கொண்டு இருக்கும் குமிழ் குமிழாக தோன்றும் சொரியாசிஸ்.
Guttate
Psoriasis,- உடல் முழுவதும் பரவி தோல்
முழுவதும் உதிர்ந்து விடக்கூடிய சொரியாசிஸ்.
Pustular
Psoriasis - சிறு நீர்க்குமிழ்கள் ,பழுப்பு நிற சீழ், குறுக்காக வெடித்தல், நீர்வடியும் சொரியாசிஸ்.
lnverse
Psoriasis - அக்குள், தொடையிடுக்கு, கை, கால் மடிப்புகள், மற்றும் இதர மடிப்புகளில்
தோன்றும் சொரியாசிஸ்.
Erythrodermic
Psoriasis - பெரிய பெரிய வட்டங்களாக ,சிவப்பு நிறத்துடன் பெரிய பெரிய மீன்
செதில்கள் போன்று ஒட்டிக்கொண்டு இருக்கும் அடை சொரியாசிஸ்.
Psoriatic
Arthritis -தண்டுவடம் மற்றும் மூட்டுகளில் தாக்கும்
சொரியாசிஸ்.
கீழ்க்கண்டவைகள் சோரியாசிஸ் நோயை அதிகப்படுத்தும்
·
அதிகமான அல்லது மிக குறைவான சூரிய வெப்பம் உடலை தாக்குவது.
·
மன அழுத்தம்,
·
அதிகமாக மது குடிப்பது.
·
புகைபிடித்தல்,
·
மாமிச உணவுகள், முக்கியமாக கடல் உணவுவகைகள்.
·
சில மருந்துவகைகள்
முதலியன சோரியாசிஸ் அதிகப்படுத்துகின்றன.
சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள்
ü தலையில் பொடுகு, அரிப்பு, முடிகொட்டுதல்,
ü காதுக்கு பின் அல்லது
நெற்றியில் அல்லது உடலில் சில இடங்களில் அல்லது உடல் முழுவதும் உலர்ந்த புண்கள்,
ü அரிப்பு, அதிலிருந்து மீன் செதில்
போல பொடுகு உதிர்தல்,
ü சொரிந்தால் இரத்த கசிவு,
ü சொத்தை நகம்,
ü மூட்டுகளில் வலியும்
வீக்கமும்,
ü உள்ளங்கை மற்றும்
உள்ளங்கால்களில் பிளேடால் வெட்டியது போன்ற வெடிப்பு, அரிப்பு, தோல் உரிதல்
ü காதின் பின்புறம், தலை,முழங்கை, முழுங்கால் மற்றும் மூட்டுகள் ஆடுதசை, முதுகு, முதலிய பாகங்கள்
பாதிக்கப்படும்.
ü கைவிரல், கால்விரல் நகங்களை தாக்கி, சிறு குழிகளையும், வெண்மை நிற மாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும்
ஏற்படுத்தும்.
(சிலருக்கு இதில் ௯றப்பட்டுள்ள
எலலா அறிகுறிகளும் இருக்கலாம். சிலருக்கு ஒரு சில அறிகுறிகள் மட்டும் இருக்கலாம்)
அது மட்டும் இன்றி கோடை காலத்தில் அதிக வியர்வை சுரப்பதன்
காரணமாக தோலில் அதிக எரிச்சல் உண்டாகும். அதே நேரத்தில் குளிர் காலத்தில் அதிக
வறட்சியின் காரணமாக எண்ணெய்பசை குறைந்து எரிச்சல் உண்டாகும்,
சிகிச்சை
நவீன மருத்துவத்தில்
ஸ்டீராய்ட் மருந்துகளை வெளிப்பூச்சாகவும், உள்ளுக்கும் கொடுப்பார்கள். இது
பக்கவிளைவுகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
No comments:
Post a Comment